முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் உயிரிழப்பு..

ஹங்வெல்ல – ஊராபொல வீதியின் மெத்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயதுடைய சிறுமி ஒருவரும் 37 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாய் ஒன்றினுல் விழுந்தததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணொருவரையும் சிறுமியையும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.