பாதிப்படைந்துள்ள வேர்களை சீர் செய்யும் ரசாயன சிகிச்சைகள், வெப்பமாக்கும் கருவிகள், மாசு போன்ற பல காரணங்களால் உங்கள் முடியின் வேர்கள் பாதிப்படையும். இதனால் முடியின் வளர்ச்சி நின்று கூட போகலாம்.
பாதிப்படைந்துள்ள வேர்களை சீர் செய்யும் திறனை கொண்டுள்ளது கறிவேப்பிலை. அதற்கு காரணம், அதிலுள்ள அதிமுக்கிய ஊட்டச்சத்துகள். இவை முடிக்கு நல்லதை அளிக்கும்.
கறிவேப்பிலை பேஸ்ட்டை நேரடியாக தலைச்சருமத்தில் தடவிக் கொண்டால், வேர்களை அது சீர் செய்யும். மேலும் மயிர்த்தண்டுகளின் வலுவை மீண்டும் பெறச் செய்யும். அதன் சுவையினால்
உங்களுக்கு பிரச்சனை இல்லையென்றால் அதனை அப்படியே உண்ணவும் செய்யலாம். பாதிக்கப்பட்ட முடிக்கு முதலுதவியாக செயல்படும் கறிவேப்பிலை. முடியின் வேர்கள் வலுவடைந்து விட்டால், முடியின் வளர்ச்சியும் வேகம் பிடிக்கும்.
(riz)