முடிந்தால் மஹிந்த பெலியத்தவில் போட்டியிடட்டும் – சத்துர சேனாரத்னவிடமிருந்து பகிரங்க சவால்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பெலியத்தவில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவின் புதல்வர்  நேற்று பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

சுகததாச அரங்கத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சத்துர சேனாரத்ன இந்த சவாலை விடுத்துள்ளார்.

ஆரம்பித்த இடத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் மேலும் அவர் கூறினார்.