மரபணு பிரச்சினைகள், உடல் நலக்குறைவு, தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை பழக்கங்கள், வெப்பம் அதிகமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துதல் போன்ற எண்ணிலடங்காத காரணங்கள் முடி உதிர்வை ஏற்படுத்துகின்றனர்.
எனவே இதற்கு செலவு குறைந்த பக்க விளைவுகள் ஏற்படுத்தாத சில முறைகளை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டிலேயே தயாரிக்கப்படும் மாஸ்க்கை பயன்படுத்தி உங்கள் முடி உதிர்தல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
ரோஸ் வாட்டர்:
பயன்கள் முடி உதிர்வை தடுப்பதில் ரோஸ் வாட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் முடியின் வேர்க் கால்களை புதிப்பித்து முடியின் pH(அமில கார சமநிலையை) நடுநிலையாக்குகிறது.
வீட்டிலேயே தயாரிக்கப்படும் மாஸ்க்கின் பயன்கள்:
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து கூந்தலுக்கு பயன்படுத்தும் போது மிகச் சிறந்த பலன் கிடைக்கிறது. முடி உதிர்வை அதன் வேர்க் கால்களிலிருந்து இந்த மாஸ்க் தடுக்கிறது இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்கள் கூந்தல் அலைபாயும்.
தேவையான பொருட்கள்:
1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி
1 டேபிள் ஸ்பூன் பூந்தி கொட்டை பொடி
1/4 டீ ஸ்பூன் கற்பூரம் பொடி
3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்
தயாரிக்கும் முறை :
ஒரு கண்ணாடி பெளலில் தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும் நன்றாக பொருட்களை எல்லாம் கலக்கவும் நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும்
பயன்படுத்தும் முறை:
இப்பொழுது இந்த பேஸ்ட்டை உங்கள் முடி மற்றும் மயிர் கால்களில் நன்றாக படும் படி அப்ளே செய்து மசாஜ் செய்ய வேண்டும் பிறகு 10 நிமிடங்கள் ஊற வைக்கவும் பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசவும் வாரத்திற்கு 2- 3 முறை இதை செய்து வந்தால் உங்கள் முடி உதிர்தல் பிரச்சினை குறைந்து அடர்த்தியான கூந்தல் பெறுவீர்கள்