எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் புதன்கிழமைக்குள் நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முற்றாக மூடப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் எச்சரித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாடு காரணமாக இடியப்பம், பிரைட் ரைஸ், கொத்து, முட்டை ரொட்டி, கேக், புட்டு, வத்தலப்பன் போன்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரதூரமாக மாறவுள்ள பிரச்சினை

வர்த்தக அமைச்சு உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களும் உடனடியாக தலையிட்டு முட்டை சங்கங்களுடன் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் பிரச்சினை பாரதூரமாக மாறும் என அவர் குறிப்பிட்டார்.
“விலையை குறைக்க வேண்டுமானால் குறையுங்கள், அதிகரிக்க வேண்டுமானால் கூட்டுங்கள். ஏதாவது செய்யுங்கள். ஏதாவது செய்து முட்டை வேண்டும். இல்லையெனில் ஹோட்டல் தொழிலை தொடர முடியாது” என்றார்.
கேக் உற்பத்தி முற்றாக நிறுத்தம்
