(FASTNEWS | COLOMBO) – பத்து பேரை அடித்து வீழ்த்தும் ஆக்ஷன் ஹீரோவாக தொடர்ச்சியாக நடித்து வந்த விஜய், ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் இணைய தள நிறுவன சிஇஓவாக நடித்து ஒருவிரல் புரட்சி வசனம் பேசி அசத்தினார்.
அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அட்லியுடன் விஜய் இணையும் 3வது படமாக இது உருவாகிறது. இதன் படப் பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இதையடுத்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. விஜய்யை சந்தித்து ஸ்கிரிப்ட்டை கூறிய இயக்குனர், இது சூப்பர் ஹீரோ கதை இல்லை, கேங்ஸ்டர் கதை அதாவது தாதா கதை’ என்றாராம்.
அது விஜய்க்கு பிடிக்கவே பணியாற்ற தலை அசைத்திருக்கிறாராம். 50 நாட்களில் படப்பிடிப்பை எடுத்து முடிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. கேங்ஸ்டராக அதாவது தாதா வாக முதன்முறையாக விஜய் நடிக்கவுள்ள இப்படம்பற்றிய அறிவிப்பு சீக்கிரம் எதிர்பார்க்கப்படுகிறது.