முதன்முறையாக பெண்களால் செலுத்தப்பட்ட விமானம் வெற்றிகரமாக சிங்கப்பூரில் தரையிறக்கம்…

(FASGOSSIP-COLOMBO) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் விமானிகளினால் செலுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் வெற்றிகரமாக சிங்கப்பூரில் தரையிறக்கியுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீலங்கன் விமானம், விமானி உட்பட முழுமையாக பெண் ஊழியர்களுடனான விமானம் சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.

யூ.எல் 306 ரக விமானம் தற்போது சிங்கப்பூரில் தறையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.