முதன் முறையாய் கூடும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு புதிய உறுப்பினர்கள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நாளைய தினம் முதன் முறையாக கூடவுள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக டாக்டர் தீபிகா உடுகம நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய உறுப்பினர்களாக சாலிய பீரிஸ், கஸாலி உசேன், அம்பிக்கா சத்குணநாதன் மற்றும் லயனல் பிரனாந்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் தனிப்பட்ட காரணங்களுக்காக லயனல் பிரனாந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து இராஜினாமா செய்து கொண்டதன் பின்னர் அந்த இடத்தின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இதுவரையில் யாரும் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நாளைய தினம் கூடி எதிர்வரும் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளனர்.