2018ம் கல்வியாண்டுக்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை உட்சேர்க்கும் முறையில் ஏதாவது அநீதிகள் நடந்திருப்பின் முதலாவதாக குறித்த பாடசாலைக்கும் பின்னர் கல்வியமைச்சிற்கு அல்லது சம்பந்தப்பட்ட மாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் குறித்து முறையீடுகளை முன்வைக்குமாறு கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தற்போது முதலாம் தரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பாடசாலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதோடு, அநீதி இழைக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் சிறப்பு நிவாரண அலகு ஒன்றினையும் ஆரம்பித்து அதனூடாக முறைப்பாடுகளை ஆராய தீர்மானித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 15ம் திகதி நடாத்த அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
#reeshma