முதலாம் தர கெபின்களை விருத்தி செய்துள்ள குவைத் எயார்வேஸ்

தேசிய ரீதியில் மிகச்­சி­றந்த பங்­க­ளிப்­பு­களை வழங்கும் குவைத் எயார் வேஸ் புதி­தான பல அபிவிருத்தி  திட்­டங்­களை Boeing 777 விமானத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்தவகையில் குறித்த விமா­னத்தில் பய­ணி­களின் நலன்­க­ருதி முதலாம் வகுப்பு அறை­களை உருவாக்கியுள்ளது. இத­ன­டிப்­ப­டையில் அடுக்­கு­முறைசார் திட்­டங்­க­ளின்­ப­டியும், பய­ணி­களின் பாது­காப்பு நலன் கரு­தியும், வச­தி­வாய்ப்­பு­க­ளுடன் கூடிய வகையில் மேற்­கு­றித்த வச­தி வாய்ப்­புகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

எதிர்­வரும் நவம்பர் மாதத்தில் நியூ­யோர்க்­கி­லி­ருந்து லண்­ட­னுக்கு செல்லும் விமான சேவையினூடாக  குறித்த விசேட சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.