(FASTNEWS|COLOMBO)- இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது.
முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்படி இலங்கை அணி நியூசிலாந்து அணியை விட 18 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது.
துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பில் திக்வெல்ல 61 ஓட்டங்களையும் மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் பட்டேல் 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.