முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று(09)…

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று(09) நடைபெறவுள்ளது.

462 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய(08) மூன்றாம் நாள் ஆட்ட முடிவு வரை விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது