இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற முதலாவது T-20 போட்டியில் இந்தியா அணி 93 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு 181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க 23 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 4 விக்கட்டுக்களையும் , ஹர்திக் பாண்டியா 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக யுஸ்வேந்திர சஹால் தேர்வு செய்யப்பட்டார்.