அவிசாவளை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வயிற்று வலி, மயக்கம் மற்றும் வாந்தி போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, 28 ஆண்கள் மற்றும் 58 பெண்களுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், நோய்க்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.