முதல் தோல்வி குறைத்து வெட்கப்படுகிறோம் – சந்திமால்…

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று முன்தினம்(10) இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால் வெற்றி பெற்று, இலங்கை அணியானது தோல்வியினை தழுவியது.

இதுகுறித்து டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவிக்கையில்;

“நாம் போட்டியில் தப்பாக விளையாடி விட்டோம். எமது கலத்தேடுப்பு ஆரம்பத்தில் ஒழுங்காக அமையவில்லை. தேவையான பந்துகளின் பிடி எடுப்பினை தவறவிட்டோம். குறித்த பிழைகளினூடாக நாம் பாடம் கற்க வேண்டும். எவ்வாறாயினும் குசல் மென்டிஸ் இனது ஆரம்பம் சிறப்பாக அமைந்தது எனலாம்.. இளம் வீரர் என்ற முறையில் அவர் பெற்ற சதத்தினை பாராட்டுகிறோம்.. அவ்வாறே, லஹிறு குமாரவின் பந்து வீச்சும் சிறப்பாக அமைந்தது. எனினும், போட்டியின் கௌரவம் மேற்கிந்திய தீவுகளுக்கு சொந்தமானது.. போட்டியின் 05 நாட்களும் அவர்களே முன்னிலையில் இருந்தனர்..”