முதல் நாள் ஆட்டத்தின் மதிய உணவுக்கு முன் சதமடித்த உலகின் ஐந்தாவது வீரராக வார்னர்..

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று(03) ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி , முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் , தனது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா அணி இன்றைய நாள் முடிவின் போது 3 விக்கட் இழப்பிற்கு 365 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிவரும் MT Renshaw 167 ஓட்டங்களையும்  PSP Handscomb 40 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

டேவிட் வோனர் 17 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இப்போட்டில் டேவிட் வோர்னர், டெஸ்ட் போட்டியொன்றின் முதல் நாள் ஆட்டத்தின் மதிய உணவுக்கு முன் சதமடித்த உலகின் ஐந்தாவது வீரராக வரலாற்றில் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=PZa5u-KB810″ width=”560″ height=”315″]