ஆறாவது இருபதுக்கு இருபது உலக்கிண்ண போட்டியில் இலங்கை அணியினர் போட்டியிடும் முதலாவது போட்டியானது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கொல்கத்தாவில் ஈடின் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (17) நடைபெறவுள்ளது. குறித்த போட்டியானது இரவு 7.3௦ மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஈடின் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (16) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மேதியூஸ் கூறுகையில், குறித்த முதல் போட்டியானது மிகவும் முக்கியமானதொன்றாகும் எனத் தெரிவித்திருந்தார்.
குறித்த சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்;
“வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க உபாதை நிலையில் உள்ளவேளை அவர் அணியில் விளையாடுவாரா இல்லையா என நாளை (இன்று) தெரியவரும்.
இன்னும், சங்கா மற்றும் மஹேல ஆகியோர் இடம்பெற்றிருந்த உலக்கிண்ண அணியினர் உறுதியான வீரர்களாகக் காணப்பட்டனர்.என்றாலும் நம்மால் அவர்களை தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது, புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். என்றாலும் எமது அணியினர் இன்னும் உறுதியான நிலையில் இல்லை. அணிக்கு உறுதியும் பலமும் வேண்டும்.”
மேலும், ஒவ்வொரு அணியினரும் உலக்கிண்ணம் குறித்து எதிர்பார்ப்புகளுடனேயே இருக்கின்றனர். நாமும் அவ்வாறே, என்றாலும் பொதுவாக பொழுதுபோக்கு முறையிலேயே ஆடத் தீர்மானித்துள்ளோம்”