முதல் முதலாக தனது காதலி குறித்து பேசினார் குசல் மென்டிஸ்..

இலங்கை கிரிக்கெட் அணியின் திறமையான துடுப்பாட்ட நட்சத்திரமாக குசல் மென்டிஸ் திகழ்கிறார்.

21வது வயது நிரம்பிய குறித்த இலங்கை கிரிக்கெட் வீரரான குசல் இனது திறமைகளை கண்டு வெளிநாட்டு ரசிகர்கள் கூட குசல் மீது அலாதிப்பிரியம் கொண்டுள்ளனர்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டிக்கு பின்னரே குசல் இனது திறமைகள் குறித்து அனைவரும் கதைக்கத் தொடங்கியுள்ளனர்.

குசல் குறித்த போட்டியின் போது 176ஓட்டங்களை  பெற்றிருந்தார்.

அதுமட்டுமின்றி, இதுவரை ஆஸி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி இரண்டிலும் அரைச்சதத்தினை பூர்த்தி செய்திருந்தார்.

குசலின் வெற்றிக்குப் பின் நிழலாய் இருந்தவர் தந்தை என குசல் கூறியிருக்கிறார். தந்தைக்கு பெரிய கனவாய் இருந்தது திறமையான கிரிக்கெட் வீரராக தன்னை மாற்றுவதே.. ஆகையால் தனக்கு கிடைக்கும் கௌரவங்களும், பாராட்டங்களும் தந்தைக்கே உரித்து என குசல் மேலும் தெரிவிக்கிறார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுடனான நேர்காணலிலேயே மேற்படி குசல் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, குசல் அவரது காதலி குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“நான் விளையாடுவதில் அவளுக்கு அலாதிப்பிரியம், எப்போதும் அவள் கூறுவது திறமையினை தக்க சமயத்தில் வெளிக்காட்ட வேண்டும் என்பதே.. நான் ஆடும் எல்லாப் போட்டிகளையும் ஒன்று விடாது பார்ப்பாள். மேலும் எனது கிரிக்கெட் உலகிலுள்ள நன்மைகள் போன்றே தீமைகளையும் கோடிட்டுக் காட்டுகிறாள்” என குசல் தெரிவித்துள்ளார்…