முதல் முறையாக விவசாயத்திற்கு இலவசக் காப்புறுதி…

சிறுபோகத்துக்கான விவசாய காப்புறுதி சான்றிதழை வழங்கும் ஆரம்ப வைபவம் முதல் தடவையாக நேற்று(28) அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் ஹம்பாந்தோட்டை நோனாகம கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

நெல், வெங்காயம், மிளகாய், சோளம், உருளைக்கிழங்கு ஆகிய பயிர் உற்பத்தி விவசாயிகளுக்கு இதன் மூலம் நன்மை கிட்டவுள்ளது.

2018ம் ஆண்டில் விவசாயக் காப்புறுதிக்காக அரசாங்கம் 5,228 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

பயிர் சேதங்களின் போது விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் விவசாய காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ், உறுப்பினர் தொகையாக வருடாந்தம் 1,350 ரூபாவை இதுவரைக் காலம் விவசாயிகள் செலுத்த நேர்ந்தது.

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைய, இந்த கொடுப்பனவையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.