முதல் வாரத்தில் விவாதத்திற்கு தான் தயார் – அநுர

8 வது பாராளுமன்றத்தின் முதல் வாரத்தில், அமைச்சரைவை அதிகரிப்பு குறித்து,விவாத்திற்கு தயார் என ஜேவிபி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து, உருவாக்கியுள்ள தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சரவை அதிகரிப்பு குறித்தே விவாதிக்கப் போவதாக மேலும் அறிவித்துள்ளது.

மேற்படி கருத்தினை ஜே.வி.பி யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவே தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் வெளி அமைச்சர்களின் எண்ணிக்கை என்பன, எவ்வாறு அமைய வேண்டும் என அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் உட்பிரிவு 46.3 தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இன்னும், அமைச்சரவையின் எண்ணிக்கையினை தேவையேற்பட்டால் நாற்பத்தி ஐந்து தொடக்கம் ஐம்பத்தைந்து வரை அதிகரிக்க வேண்டுமாயின் பாராளுமன்ற ஒப்புதல் பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் எண்ணிக்கையானது சுயலாபங்களுக்காகவே அதிகரிக்கப்படுகின்றதே தவிர நாட்டின் அபிவிறுத்தி நோக்கம் இல்லை என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான உண்மைகளை,மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே, முதலாவது வாரத்தில், தாம் விவாதத்தில் ஈடுபட இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

(riz)