(FASTNEWS| COLOMBO) – இந்தியாவில் முஸ்லிம் ஆண்கள் முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்வதை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்திய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த முத்தலாக் மசோதாவில்; முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019 எனப்படும் முத்தலாக் தடை சட்ட மசோதா பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மசோதா பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தி, முஸ்லிம் பெண்களுக்கு நீதியை வழங்கும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் ஆண்கள் முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்வதை இந்த மசோதா தடுக்கிறது. முத்தலாக் கூறி விவகாரத்து செய்வதை இந்த மசோதா செல்லாது என்றும் சட்டவிரோதமானது என்றும் அறிவிக்கிறது.
இந்த குற்றத்திற்கு அபராதத்துடன் மூன்றாண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க சட்டம் வழிவகுக்கிறது. மேலும் விவகாரத்து செய்யப்படும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்கவும் இந்தச் சட்டம் வகை செய்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணோ, அவரது ரத்தரீதியான உறவினரோ இது தொடர்பாக புகார் அளிக்கலாம். அதன்மீது பிணையில் வெளிவர முடியாத வழக்குப் பதிவு செய்யலாம். பிணை வழங்கப்படும் முன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்தை கேட்க மசோதா வகை செய்கிறது.
இதுகுறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, “முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. இஸ்லாமிய பெண்களின் வளர்ச்சிக்கும், கண்ணியத்திற்கும் முத்தலாக் தடை சட்டம் உதவும். முத்தலாக் தடை மசோதாவை ஆதரித்து வாக்களித்த கட்சிகளுக்கும், எம்பிக்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.