முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் ‛முத்தலாக்’ விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் இன்று(22) தீர்பளித்துள்ளது.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மேற்கோற்காட்டி முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை ‘தலாக்’ கூறும் ‘முத்தலாக்’ முறை நடைமுறையிலுள்ளது.
குறித்த இந்த நடைமுறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண், இந்த முறைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ‘முத்தலாக்’ முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் முத்தலாக் இற்கு 6 மாத இடைக்காலத் தடையினை விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து குறித்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட விசேட அமர்வு குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)