இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இதில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், 4 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தனர். இதனால் அணியின் ஓட்டங்கள் சீராக உயர்ந்து வருகிறது.
அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 8விக்கெட் இழப்பிற்கு 348 ஓட்டங்களை எடுத்துள்ளது. டேவிட் வார்னர் (93), ஆரோன் பிஞ்ச் (107).
349 என்ற வெற்றியிளக்கை நோக்கி இந்தியா களமிறங்கியுள்ளது.