முத்துராஜவெல எண்ணை களஞ்சிய சாலை குழாயில் வெடிப்பு

முத்துராஜவெல எண்ணை களஞ்சிய சாலைத் தொகுதிக்கு கடல் வழியே விநியோகம் மேற்கொள்ளும் குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக, அந்த எண்ணை விநியோகம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் வெடிப்பு இடம்பெற்ற குழாயினது சீரமைப்பு பணிகளை இன்று நிறைவு செய்ய முடியும் என அதன் தலைவர் டி.ஜி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மிதவை குழாய் வெடிப்பினால் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள கச்சா எண்ணெய் கப்பலின் கச்சா எண்ணெய் இறக்கப்படும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் வெடிப்பு காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.