புதிய அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் முன்னர் இருந்த நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று(05) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வாய்மொழி மூலமாக தந்த வாக்குறுதியின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால் நவம்பர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி நாட்டை ஸ்தீரமடையச் செய்வது சபாநாயகர் என்ற அடிப்படையில் தனது கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக தனக்கு ஒத்துழைப்பு வழங்குவது ஜனாதிபதி ஒருவரின் கடமை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
