குடியேறிகளுக்கு தடைவிதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மாற்றத்திற்கு உள்ளான புதிய ஆணையிலும் முன்னர் தடை விதிக்கப்பட்ட அதே 7 முஸ்லிம் நாடுகளுமே இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது பற்றி ஜனாதிபதியின் முந்தைய நிர்வாக உத்தரவில் உள்ளடக்கப்பட்டிருந்த முறையான விசாவுடன் அமெரிக்கா வருபவர்களுக்கான தடை அகற்றப்பட்டுள்ளது.
டிரம்பின் முந்தைய குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கான தடையை மத்திய நீதிமன்றம் முடக்கியதை அடுத்தே புதிதாக மாற்றப்பட்ட தடை உத்தரவை ஜனாதிபதி அறிவிக்க எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
புதிய தடை உத்தரவிலும் ஈரான், ஈராக், சிரியா, யெமன், சோமாலியா, சூடான் மற்றும் லிபியா ஆகிய நாட்டவர்கள் மீதே அமெரிக்கா வர தடை விதிக்கப்படவுள்ளது.
எனினும் கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் குறித்த நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கான இரட்டை பிரஜா உரிமை பெற்றவர்கள் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய தடை உத்தரவு இந்த வாரத்திற்குள் பிறப்பிக்கப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.