முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை…

முன்னறிவித்தல் இன்றி, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்த விடயம் தொடர்பில் நாளை(30) தொழிற்சங்கங்களின் கருத்துக்களை கேட்டறியவுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.எம். அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி கட்டுப்பாட்டாளர்கள், புகையிரத காப்பாளர்கள், சாரதிகள் மற்றும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

முன்னறிவித்தலின்றி பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அசெளகரியத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

இதனால் கோட்டை ரயில் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.