முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம FCID முன்னிலையில்

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு, முன்னாள் அமைச்சர் குமார் வெல்கமவை, இன்று திங்கட்கிழமை (30) விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அவர், போக்குவரத்து அமைச்சராக இருந்த காலகட்டத்தில், பஸ்களைக் கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காகவே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.