முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் பதவி நீக்கம்..

வடமேல் மாகாண சபையின் ஆளுங்கட்சி அமைப்பாளர் பதவியில் இருந்து, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோ நீக்கப்பட்டுள்ளார்.

அம்மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் அவர் நீண்டகாலமாக சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாமையே என, வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமேல் மாகாண சபையின் ஆளுங்கட்சி அமைப்பாளர் பதவிக்கு பண்டார ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.