முன்னாள் அமைச்சர் பஷிலுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வாபஸ்..

திவிநெகும வழக்கில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை மீளப்பெற சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும், பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கான தடையும் நீதிமன்றத்தால் இன்று(06) நீக்கப்பட்டுள்ளது.

திவிநெகுமவுக்கு சொந்தமான 50 இலட்சம் ரூபா நிதியில் நாட்காட்டிகள் அச்சிட்டமை தொடர்பான வழக்கே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.