முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கம்பஹா – ஒருதொட பகுதி காணி தொடர்பான வழக்கில் இதுவரை சட்டமா அதிபரின் அறிவுரை பெறப்படவில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த வழக்கு நேற்று(28) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வழக்கை மே மாதம் 5ம் திகதி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.