முன்னாள் அமைச்சர் மற்றும் செயலாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை…

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று(12) உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது வான் சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் சபையில் ஊழல் மோசடி மேற்கொண்டமை மற்றும் பதவிக்காக தனிப்பட்ட செயலாளரை நியமித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் இவருக்கு எதிராக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இந்த வழக்கை தாக்கல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)