முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு பிணை..

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(25) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சராக இருந்த காலத்தில் நிதி பெற்றுக் கொள்ளப்பட்டமைக்கான உரிய ஆவணங்களை வௌிப்படுத்தாமல் பொரல்லை, கின்ஸி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்துள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த அந்த வீட்டை கொள்வனவு செய்வதற்காக 27 மில்லியன் ரூபா நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, முன் வைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்துள்ளார்.

இரண்டு இலட்சம் ரூபாவான ரொக்கப் பிணை மற்றும் 05 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையிலும் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

(rizmira)