முன்னாள் அமைச்சர் ரோஹிதவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல்

2004 – 2006ம் ஆண்டு காலப் பகுதிகளில், 412 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் பொருட்களை இலஞ்சம் மூலமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரோஹித  அபேகுணவர்த்தனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இன்று இவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக, ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.