முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வௌிநாடு செல்வதற்கு ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு விடுக்கப்பட்ட தடையுத்தரவை தற்காலிகமாக நீக்கிக் கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் நிஷாந்த பந்துல கருணாரதன, இந்த உத்தரவை இன்று(17) பிறப்பித்தார். முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, 1 மாதகாலம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.
நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை ஜப்பானில் இடம்பெறும் மத மற்றும் கலாசார மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
‘400 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் தொடர்பில் உரிய விவரங்களை வெளிப்படுத்தவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.