முன்னாள் இந்நாள் ஜனாதிபதி சந்திப்பில் நடந்த முக்கிய தீர்மானம் கசிந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று முன்தினம் இரவு சந்திப்போன்று நடைபெற்றது.

இதில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்ட போதும் இருவர்களுக்கு இடையில் ஒரு முக்கிய விடயம் பேசப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் ஆக்கப்போவது இல்லை என இருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் இவர்கள் இருவரும் ஒரு நிலைப்பட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் ஆக்கப்போவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்து வருகின்றது.