பொலிஸ் திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எல்.டி.டி.ஈ. அமைப்பு தொடர்பில் அவர் வௌியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட பிரிவிற்கு இன்று(08) அழைக்கப்பட்டிருந்தார்.
பொலிஸ் திட்டமிட்ட பிரிவிற்கு தமது சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய சந்தர்ப்பத்திலேயே, அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
————————————————————-(UPDATE)
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா கைது…
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.