முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க, பாரிய இலஞ்ச ஊழலை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று(20) ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலமளிப்பதற்காகவே அவர், அழைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று முற்பகல், குறித்த ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தாக அறிய முடிகின்றது. அதற்கமைய, இன்று முற்பகல் 10 மணிக்கு அவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.