முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொட இன்று(13) மீளவும் CID முன்னிலையில்…

(FASTNEWS |COLOMBO)- கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொட இன்று(13) இரண்டாவது முறையாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.

இவர் கடந்த 11ம் திகதி கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வு தலைமையகத்துக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சென்ற முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொட சமூக கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.