முன்னாள் காற்பந்து வீரர் ஜோர்ஜ் வேஹ் (george weah), லைபேரியா நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
அந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தது. இதில் ஜோஜ் வேஹிற்கு 60% ஆன வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அவரது வெற்றியை அடுத்து, அந்த நாட்டின் தலைநகர் மொன்ரோவியாவில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, ஆபிரிக்காவின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் ஜனாதிபதியான எலன்ஜொன்சன் சேர்லீஃபிடம் இருந்து ஜோர்ஜ் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்.
அத்துடன் நீண்ட காலத்துக்குப் பின்னர் லைபேரியாவில் இடம்பெறும் ஜனநாயக ஆட்சிமாற்றம் இதுவாகவும் கருதப்படுகிறது.
ஜோர்ஜ் வேஹ், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல முக்கியமான காற்பந்து கழகங்களுக்காக விளையாடியுள்ள முக்கிய வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#reeshmaa…