முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

(FASTNEWS | COLOMBO) – ரகர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாட்சியங்களை வேண்டுமென்றே மறைத்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.