கட்டலோனியாவை தனிநாடாக அறிவித்து, ஸ்பெயின் அரசின் நடவடிக்கைக்கு பயந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பிச் சென்ற கட்டலோனியா ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டிமோன், டென்மார்க் – ஜெர்மனி எல்லையில் நேற்று(25) கைது செய்யப்பட்டார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு மக்கள் கட்டலோனியா முன்னாள் ஜனாதிபதியினை விடுவிக்குமாறு, அவருக்கு ஆதரவு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.