ஜனாதிபதி செயலகத்திற்கான வாகன கொள்வனவின் போது அரச பணத்தில் 175 இலட்ச ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கே.டீ.குணரத்னவுக்கு பிணையில் செல்ல கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(08) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, 50,000 ரூபா மற்றும் ஐந்து இலட்ச சரீரப் பிணைகள் இரண்டிலும் விடுவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபரான ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் கணக்காளர் எல்.ஜீ.குணரத்னவின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.
#rishma