(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்திருந்தார்.
கட்சித் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கூறுகையில்;
“.. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரோ அல்லது பொலிஸ் மா அதிபரோ உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூர வேண்டியதில்லை. பெஜட் வீதி அரச மாளிகையில் சொகுசாக வாழ்ந்து வரும் முன்னாள் ஜனாதிபதியே இதற்கு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும். சிறிசேனவுக்கு இப்போது ஜனாதிபதிக்கான சிறப்புரிமை இல்லை.
எனவே அவரை கைது செய்யலாம். மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றி தெரிந்து கொண்ட பின்னர் சிங்கப்பூருக்கு சென்று ஒளிந்து கொண்டார். மேலும் அவருக்கு உடனடியாக நாடு திரும்ப விமானத்தில் இருக்கை இல்லை என்றார், ஆனால் விசாரணைகளில் இருந்து குறித்த விமானத்தில் இருக்கை இருந்ததாக வெளியாகியது. இது அவரது நாடகமாகவே நாம் காண்கிறோம். அவர் மக்களை பலிக்காடாக்கினர்.” என்றும் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.