முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் காலமானார்…

முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணியும் சட்ட மா அதிபருமான ஷிப்லி அஸீஸ் (Shibly Aziz) இன்று (08) காலை காலமானார்.

நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் தனது 75 ஆவது வயதில் இன்று காலமானார்.

அரசியலமைப்பு சபையின் உறுப்பினராகவும் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராகவும் அவர் கடமையாற்றி உள்ளார்.

அவருடைய இறுதிக்கிரியைகள் இன்று மாலை 5.30 மணியளவில் ஜாவா முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற உள்ளது.