முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக நேற்றிரவு(13) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

வைத்திய பரிசோதனைக்காகவே அவர் சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அவருக்கு வைத்திய பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் உதித லொக்குபண்டார மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷ உட்பட குழுவினர் சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.