முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீட்டிற்கு சட்டவிரோதமாக உள்நுழைந்தவரின் விளக்கமறியல் நீடிப்பு..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கொழும்பில் உள்ள வீட்டிற்கு ஆயுதங்களுடன் சட்டவிரோதமாக உள்நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 19ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி குறித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கொழும்பில் உள்ள வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட இளைஞர் கருவாத் தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(06) மீண்டும் கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குறித்த இளைஞர் இதற்கு முன்னரும் மனநல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார் என்று நீதிமன்றத்திற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவருக்கு சிகிச்சை வழங்க, அவரை அங்கொட மனநல வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

(rizmira)