முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த மாத பிற்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கூட்டு எதிரணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, தகவல் வெளியிட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மஹிந்த ராஜபக்ஷ இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் சீனப் பயணம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, அவர், சீன அரச தலைவர்கள் மற்றும் சீனாவில் உள்ள இலங்கை சமூகத்தினரைச் சந்திக்கவுள்ளதாகவும் கூட்டு எதிரணி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.