முன்னாள் துருக்கிப் பிரதமர் டெமிரல் இறையடி

கடந்த அரை நூற்றாண்டு காலமாக துருக்கி அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரதமரான சுலைமான் டெமிரல் இன்று (17) காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 90.

இதய செயலிழப்பு மற்றும் சுவாசக் குழாய்த் தொற்று போன்ற நோய்களுக்கு ஆளாகியிருந்த நிலையில் இவர் அங்காரா குவான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையிலேயே இன்று பிற்பகல் 2.05 மணியளவில் இறந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் 1993-2000 வரை துருக்கி ஜனாதிபதியாக கடமையாற்றிய இவர் 7 முறை பிரதமாராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.