முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன இன்று(06) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 வழக்குகள் இன்று விசாரணைக்கு
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரண குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது மேற்கொண்ட ஊழல் மோசடி தொடர்பிலேயே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.